Padasalai's Job Portal

BTemplates.com


TNPSC psychologist Job !

தமிழக கல்வி மற்றும் சிறைத்துறையில் சைக்காலஜிஸ்ட் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

 

தமிழக அரசின் கல்வி மற்றும் சிறைத்துறைகளில் நிரப்பப்பட உள்ள 8 சைக்காலஜிஸ்ட் பணியிடங்களுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் டிசம்பர் மாதம் 14-அம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.20/2016 தேதி: 15.11.2016 பணி: Superintendent of Approved Schools for Boys (Now Government Children Home for Boys) (Post Code No: 3007) (2015 -2016) காலியிடங்கள்: 03 வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பி.ஏ, பி.எஸ்சி, பி.காம் பட்டம் அல்லது Criminology and Forensic Science போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் B.T, L.T, B.Ed முடித்திருக்க வேண்டும். 



பணி: Psychologist in Department of Social Defence (Post Code No: 3006) (2015 - 2016) காலியிடங்கள்: 03 தகுதி: Psychology துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். பணி: Psychologist in Tamil Nadu Jail Service (Post Code No: 1942) (2016 - 2017 காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: Psychology துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Psychologist in Government Institute for Mentally Retarded, Tambaram (Post Code No: 1795) (2015 - 2016) காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 28 முதல் 45க்குள் இருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Superintendent பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.02.2017 Psychologist பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2017 எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை தேர்வுக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம். நிரந்த பதிவு இல்லாதவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.50 சேர்த்து மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2016 வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 16.12.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_20_not_eng_appd_schools_tnj_services.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support