வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில்
அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை பொது முன்னுரிமை,
தாழ்த்தப்பட்ட வகுப்பு அருந்ததியர் முன்னுரிமை (பெண்) ஆதரவற்ற விதவை என இன
சுழற்சி முறையில் நேர்காணல் மூலம் நிரப்பட உள்ளன.
இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், வயது 18 முதல் 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதியுடையோர் ""மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை'' என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்று நவ.18-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.