Padasalai's Job Portal

BTemplates.com


மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்


         பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மே. 21ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. 


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:108 அவசர கால சேவை ஊர்தி வசதியானது, தமிழக அரசின் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜி.வி.கே, இ.எம்.ஆர்.ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே. 21ம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தேர்ந்தெடுக்கப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

 இரண்டு பணியிடங்களுக்கும் 12 மணி நேரம் இரவு அல்லது பகல் பணி நேர சுழற்சி முறையில் பணிபுரிவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை, முகாம் நடைபெறும் நாளில்வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறிய 23 வயது முதல் 35 வயதுக்கு மிகாமல், 162.5 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, குறைந்த பட்சம் கனரக வாகன பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முகாமில் எழுத்துத்தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு, நேர்காணல், கண் பார்வை தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். 

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு 8 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி அளிப்பதோடு, தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக ரூ.100 வழங்கப்படும். ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம், அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். மாத ஊதியமாக ரூ. 7,300 வழங்கப்படும். அடிப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண், பெண் 20 வயதிலிருந்து 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பி.எஸ்.சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், பிளாண்ட் பயாலஜி, லைப் சைன்ஸ் அல்லது பிளஸ்- 2 முடித்து 3 ஆண்டு ஜி.என்.எம் படிப்பு அல்லது எ.என்.எம் அல்லது பிளஸ்- 2 முடித்து டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். 

இந்த பணிக்கு மாதச்சம்பளமாக ரூ. 8,100, இதர படிகள் வழங்கப்படும். பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிக்கு பிளஸ்- 2முடித்து அரசு மருத்துவ கல்லூரியில் 1 ஆண்டு இ.எம்.டி பட்டயப்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். 19 வயது பூர்த்தியடைந்து 30 வயதிற்கு மிகாமல், இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓராண்டிற்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 7,500 வழங்கப்படும். அடிப்படை மருத்துவ உதவியாளர், பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும். 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 45 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான ரூ. 100 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 96009 25108, 96777 96109 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support