Padasalai's Job Portal

BTemplates.com


அடுத்த ஆண்டு முன்கூட்டியே யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு

        குடிமைப் பணிகளுக்கான (யுபிஎஸ்சி) முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இத்தேர்வு, இந்த முறை இரு மாதங்களுக்கு முன்பே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய நிர்வாகப் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக அவை நடக்கின்றன. இதில் பங்கேற்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
பொதுவாக முதல் நிலைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அடுத்த ஆண்டில் அதை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய காலத்துக்குள் தேர்வு நடைமுறைகளை நிறைவு செய்து பணி நியமனம் செய்வதற்காக அடுத்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதியே முதல் நிலைத் தேர்வை நடத்த உள்ளதாக யுபிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டிலும் இதேபோன்று முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support