Home »
»
அண்ணா பல்கலைக்கழகத்தில் நீர்வள ஆராய்ச்சியாளர் பணி
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் ஆதார ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Associate
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.24,000
கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture Business Management பாடத்தில் எம்.பி.ஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ. 18,000
கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering, Integrated water Resource Management போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture, Horticulture பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி முடித்து இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.12,000
கல்வித்தகுதி: civil, Agricultural and Irrigation Engineering, Food Processing Engineering, Environmental Engineering, Agri Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி, டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Assistant
காலியிடங்கள்: 11
சம்பளம்: ரூ.6,000
கல்வித்தகுதி: Civil, Agriculture, Horticulture பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது +2 -வில் Agriculture, Horticulture பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் விவசாயம், விவசாய மேலாண்மை போன்ற விவசாயத் துறைசார்ந்த பணிகளில் உள்ள பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் Improving Agricultural Productivity and Profitability throgh Horticultural Crop Diversification in the feeder zones of metro city என்ற திட்டத்தின்கீழ் 2015 டிசம்பர் மாதம் வரை பணிபுரிய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: முழு வெள்ளைத்தாளில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி, கல்வித்தகுதி, பணி அனுபவம், தொலைபேசி எண் போன்ற முழு விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டாவை தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்துஅதனுடன் கல்வித்தகுதி, பணி அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கவரின்மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரிவதற்கான கடைசி தேதி: 03.06.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Centre for Water Resources,
Anna University, Chennai - 600025
0 comments:
Post a Comment