உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு சனிக்கிழமை
நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக
உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட இந்தத் தேர்வை எழுத
45,950 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்காக 11 இடங்களில் மொத்தம் 113 மையங்களில் சனிக்கிழமை தேர்வு நடைபெற்றது.இதில், சென்னையில் 14 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்பதற்காக, காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வர்கள் வருகை தந்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவுரைகளைப் பின்பற்றும் வகையில் செல்லிடப்பேசி, இதர உபகரணங்கள் எடுத்துச் செல்கிறார்களா என்பதை ஆய்வு செய்த பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வில் 27,634 பேர் கலந்து கொண்டதாகவும்,ஸ 18,316 பேர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.