திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர்
ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் ௮ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினரில் முன்னுரிமை
பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு அனைத்து பிரிவினருக்கும் குறைந்தது ௧௮ வயது
நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது எஸ்.சி.,-எஸ்.சி.ஏ.,-
எஸ்.டி., பிரிவினர் 22 வயது, எம்.பி.சி.,- பி.சி., பிரிவினர் 32 வயது மற்ற
வகுப்பினர் 2௦ வயது உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
சந்தைமேடு, திண்டிவனம் என்ற முகவரிக்கு வரும் ௩௧ம் தேதிக்குள் வந்து சேர
வேண்டும்.