Padasalai's Job Portal

BTemplates.com


நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணி

             பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக அதிகாரி (ஜெனரல்- ஸ்கேல்-1) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 300
பணி: நிர்வாக அதிகாரி
வயது வரம்பு: 01.10.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி. ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுசெய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு, நிலை-1, நிலை-2 என இரு நிலைகளாக நடத்தப்படுகிறது.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிற்கால உபயோகத்திற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support