தொலைத் தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் டெலிஃபோன்
இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive director,
Additional general Manager பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive director
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், தொலைத்தொடர்பியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: குறிப்பிடவில்லை.
வயது வரம்பு: 45 வயதிலிருந்து 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Additional general Manager
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், தொலைத்தொடர்பியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: குறிப்பிடவில்லை.
வயது வரம்பு: 40 வயதிலிருந்து 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பந்தப்பட்ட கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டிய முகவரி:
Dy General Manager HR ITI Limited
Regd & Corporate Office ITI Bhavan,
Doorvani nagar, Bangalore -560016.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.10.2016
மேலும் விவரங்களுக்கு: http://www.itiltd-india.com/Careers/Recruitment%20of%20R&D%20Experts_05-10-2016 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.