Padasalai's Job Portal

BTemplates.com


திருச்சி என்.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர் பணி திருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ரன. வயதுவரம்பு:35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும். மொத்த காலியிடங்கள்:120 துறைவாரியான காலியிடங்கள்:மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் - 06, கணிதம் - 08, மெக்கானிக்கல் - 11, இயற்பியல் - 04, புரடக்சன் இன்ஜினியரிங் - 08, ஆர்க்கிடெச்சர் - 05, கம்ப்யூட்டர் அறிவியல் - 06, கெமிக்கல் - 03, வேதியியல் - 07, சிவில் - 14, எனர்ஜி அண்ட் என்விரான்மெண்டல் - 03, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் - 08, எலெக்ட்ரானிக்ஸ்அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் - 10, ஹூமானிட்டீஸ் - 05, இன்ஸ்ட்ரூமெண்டேசன் - 06, மெட்டலர்ஜிக்கல் - 09, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் - 07. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.07.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் JRF பணி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் நடைபெறவுள்ள புராஜெக்ட் பணியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(JRF) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:Junior Research Fellow(JRF) Project:Solar Energy Conversion into Electricity using blended polymer electro - lytes for nanocrystalline dye sen-sitized Solarcells. காலியிடம்:01 திட்ட காலம்:3 ஆண்டுகள் கல்வித்தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி பணியில் முன் அனுபவம் இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். சம்பளம்:முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.16,000, மூன்றாவது ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முழு வெள்ளைத்தாளில் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவை தயாரித்து அதில் தற்போதைய புகைப்படம் ஒட்டவும். தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி:01.07.2013 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Dr.J.Madhavan, Principal Investigator, BRNS Project, Department of Chemistry, Thiruvalluvar University, Vellore - 632115.
Share:
கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:Technical Assistant, Laboratory Technician, Lower Division Clerk வயதுவரம்பு:30-க்குள் இருத்தல் வேண்டும். (ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும்) தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்:ரூ.200. இதனை ICARunit SBI என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எ"டுக்க வேண்டும்ம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்று இணைத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய முகவரி: DIRECTOR, Sugarcane Breeding Institute, Coimbatore - 641007. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:07.07.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sugarcane.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
Karur Vysya Bank (KVB) Recruitment 2013 – for Clerk Vacancies Name of Post: Clerk Qualification: Candidate must possess any Bachelor degree (10 + 2 +3 pattern) in Second class with 50% and above marks in aggregate from a recognized University in India or any equivalent qualification recognized as such by Central Government.Candidates having major other than computer scienceshould possess a minimum 3 months Computer Course. Application Fee: Fee can be paid in the form of Challan downloaded from website at any branch of Karur VysyaBank Limited Applicants need to pay fee in the form of Demand Draft for Rs.500/-drawn in favour of The KarurVysya Bank Limited and payable at Chennai only. Location: Tamil Nadu. Important Dates: Starting Date for Online Registration:05-06-2013 Last Date for Online Registration: 15-06-2013 Last Date for Receipt of Application: 18-06-2013 How to Apply: Candidates are required to apply online through website www.kvb.co.in(Careers Page) from 05-06-2013 to15-06-2013. After applying online candidates should take the print of the “Demand Draft Details” formand send the filled in form along with DD to The Karur Vysya Bank Limited, Central Office – Hrd, Erode Road, Karur – 639 002, Tamil nadu
Share:
SSC Southern Region Recruitment 2013 in chennai Download notification SSC Southern Region official Website Name of Post: Scientific Assistant-I Photographer Grade-III Senior Scientific Assistant (Explosives) Post Graduate Teacher (Chemistry) Trained Graduate Teacher (Tamil) Assistant Field Officer Library & Information Assistant Zoological Assistant Senior Radio Technician How to Apply: Application in prescribed format should be sent in an envelope superscribed with bold letters as “Application forthe posts of ……………….. ” on or before 01/07/2013 (08/07/2013 for candidates from far-flung areas) to Office of the Regional Director, Staff Selection Commission, (Western Region) 2nd Floor, EVK Sampath Building, CollegeRoad, Chennai – 600 217.
Share:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நீர்வள ஆராய்ச்சியாளர் பணி சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் ஆதார ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Research Associate காலியிடம்: 01 சம்பளம்: ரூ.24,000 கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture Business Management பாடத்தில் எம்.பி.ஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Research Fellow காலியிடங்கள்: 04 சம்பளம்: ரூ. 18,000 கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering, Integrated water Resource Management போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture, Horticulture பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி முடித்து இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technical Assistant காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.12,000 கல்வித்தகுதி: civil, Agricultural and Irrigation Engineering, Food Processing Engineering, Environmental Engineering, Agri Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி, டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Field Assistant காலியிடங்கள்: 11 சம்பளம்: ரூ.6,000 கல்வித்தகுதி: Civil, Agriculture, Horticulture பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது +2 -வில் Agriculture, Horticulture பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் விவசாயம், விவசாய மேலாண்மை போன்ற விவசாயத் துறைசார்ந்த பணிகளில் உள்ள பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் Improving Agricultural Productivity and Profitability throgh Horticultural Crop Diversification in the feeder zones of metro city என்ற திட்டத்தின்கீழ் 2015 டிசம்பர் மாதம் வரை பணிபுரிய வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: முழு வெள்ளைத்தாளில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி, கல்வித்தகுதி, பணி அனுபவம், தொலைபேசி எண் போன்ற முழு விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டாவை தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்துஅதனுடன் கல்வித்தகுதி, பணி அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கவரின்மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரிவதற்கான கடைசி தேதி: 03.06.2013 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Water Resources, Anna University, Chennai - 600025
Share:
பட்டதாரிகளுக்கு மத்திய அரசில்அறிவியல் உதவியாளர், ஆசிரியர் பணி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை Staff Selection Commission மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: SSC/SR/2/2013 பணி: Scientific Assistant-I (categoryNo: SR-01) காலியிடங்கள்: 03 சம்பளம்: ரூ.5,200 - 20,200 வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: B,Sc Agriculture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Photographer (Cat No: SR-02 காலியிடம்: 01 சம்பளம்: ரூ.5,200 - 20,200 வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography, Photomicrography, Developing, Printing, Enlarging, Copying போன்ற புகைப்பட படத்துறை சார்ந்த பணிகள் மற்றும் விலங்கியல் புகைப்பட கலைஞராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Scientific Assistant-I (Cat No: SR-B-01) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Chemistry, Forenic Science பாடத்தில் M,Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc. Forensic Science பட்டதாரிகள் B.Sc படிப்பில் வேதியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பணி: Post Graduate Teacher (Chemistry) (Cat No: SR-B-02) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: M.Sc. Chemistry படிப்புடன் B.Ed, D.Ted பட்டம் பெற்றிருக்க வேண்டும். +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. பணி: Trained Graduate Teacher (Tamil) (Cat.No: SR-B-03) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: தமிழ்பாடத்தில் பட்டப்படிப்பை முடித்து B.Ed, D.Ted தகுதியை பெற்றிருக்க வேண்டும். 6 முதல் 10 -ம் வகுப்புவரை தமிழாசிரியராக பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. பணி: Assistant Field Officer (Cat.No: SR-B-04) காலியிடங்கள்: 13 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Soil Science, Agriculture Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Library & Information Assistant (Cat.No: SR-B-05) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டப்படிப்புடன் B.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Zoological Assistant (Cat.No: SR-B-06) காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: B.Sc (Hons), B.Sc. Zoology படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Radio Technician (Cat.No: SR-B-07) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன் Radio Engineering பாடத்தில் பி.இ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Electrical/ Wireless உபகரணங்களைகையாளுவதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Central Recruitment Fee Stamps (CRFS) மூலமாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் செலுத்தி அதற்குரிய அஞ்சல் தலையை விண்ணப்பத்தின் தேவையான இடத்தில் ஒட்டி பதிவு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.sscsr.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Director (SR), Staff Selection Commission, 2nd Floor, EVK SampathBuilding, College Road, Chennai - 600217 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscsr.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support