Padasalai's Job Portal

BTemplates.com


குழந்தைகள் காப்பக பணியாளர், சமையல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையத்தோடு இணைந்த 15 குழந்தைகள் காப்பகப் பணியாளர்கள் மற்றும் 15 குழந்தைகள் காப்பக சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக ஆட்களை தேர்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதையொட்டி மேற்கண்ட பணிகளுக்கு நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
 இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் குறித்த விவரம் மற்றும் இனசுழற்சி முறை விவரங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம், காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
 இதற்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை சமையல் உதவியாளர் பதவிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படும்.
 பொதுவான நிபந்தனைகள் : விண்ணப்பதாரர் காலிப் பணியிடம் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட குக்கிராமங்களில் வசிப்பவராகவும், நகராட்சிப் பகுதிகளில் காலிப் பணியிடம் உள்ள பகுதி (வார்டு) அல்லது அருகில் உள்ள பகுதியில் (வார்டு) வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
 திருமணமான மகளிராக இருக்க வேண்டும், விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவர்களுக்கு உரிய வகையில் சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்.
 தகுதிகள் : குழந்தைகள் காப்பக பணியாளர் சம்பளத் தொகுப்பு ஊதியம் ரூ.3000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2016 அக்டோபர் 1-ஆம் தேதியன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 40 வயது வரை, ஊனமுற்றோருக்கு 38 வயது வரை, மலைவாழ் விண்ணப்பதாரர்களுக்கு 20 வயதிலிருந்து 40 வயது வரை)
 சமையல் உதவியாளர், சம்பளம் தொகுப்பு ஊதியம் ரூ.1500. எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 அக்டோபர் 1-ஆம் தேதியில் வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 20 முதல் 45 வயதுக்குள்ளும், ஊனமுற்றோருக்கு 43 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மலைவாழ் விண்ணப்பதாரர்களுக்கு 20 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
 மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிப் பணி

        திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் 109 பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 109
தகுதி: ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எல்க்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைபரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sdcentre.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 05.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Technical officer/D
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Officer / C
பணி: Technical Officer / C
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, Chemical, Computer Science போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Dy. Manager (Finance & Accounts)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் CA, ICWA அல்லது இரண்டு ஆண்டு முழுநேர MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Hindi Translator (JHT)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது ஹிந்தியை முதன்மை பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.npcilcareers.co.in/HQSRD2016/documents/information.aspx?info=EligibilityCriteria லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

ஹைதராபாத் மெட்ரோ ரயில் 2750 பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஹைதராபாத் மெட்ரோ ரயில் 2016-ஆம் ஆண்டிற்கான 2750 பண்டக அதிகாரிகள், பண்டக காப்பாளர், டிக்கெட் வழங்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2750
பணியிடம்: ஹைதராபாத்
தகுதி: டிப்ளமோ, பட்டம், எம்பிஏ, எம்சிஏ, பி.டெக், எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.Hyderabad Metro Raill.telangana.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

ஊரக வளர்ச்சித் துறை பணி இளநிலை பொறியாளர் பணி

                          ஊரக வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: இளநிலை பொறியாளர்
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://garhwa.nic.in/doc/Notice/corrrected%20information%20for%20JE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

உதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்பு

            உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்றனர்.
           தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நடத்தப்பட்ட இந்தத் தேர்வை எழுத 45,950 பேர் விண்ணப்பித்திருந்தனர்.




இவர்களுக்காக 11 இடங்களில் மொத்தம் 113 மையங்களில் சனிக்கிழமை தேர்வு நடைபெற்றது.இதில், சென்னையில் 14 மையங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்பதற்காக, காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வர்கள் வருகை தந்தனர்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவுரைகளைப் பின்பற்றும் வகையில் செல்லிடப்பேசி, இதர உபகரணங்கள் எடுத்துச் செல்கிறார்களா என்பதை ஆய்வு செய்த பின்னரே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வில் 27,634 பேர் கலந்து கொண்டதாகவும்,ஸ 18,316 பேர் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share:

Indbank-ல் உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணி

        இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20 உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Share:

Indbank-ல் உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணி

இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20 உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indbank Merchant Banking Services Limited (Indbank)
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Assistant Vice President (Company Secretary) - 01
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Secretarial Officer (Dealer) - 19
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: சென்னை, சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை மற்றும் கொல்கத்தா
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%202016-17.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

மத்​திய அர​சில் 5134 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:​  post​al Assist​ant​/ Sorting Assistant - 3281
சம்​ப​ளம்:​​ மாதம் ரூ.5,200-20,200​
பணி:​​ Lower division Clerk​ - 1321
சம்​ப​ளம்:​​ மாதம் ரூ.5,200-20,200​
வயது வரம்பு:​​ 01.01.2016 தேதியின்படி 18 - 27க்​குள் இருக்க வேண்​டும்.​
பணி: Data Entry Operator - 506
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
பணி: Court Clerk - 26
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி:​​ 10, +2 முடித்​தி​ருக்க வேண்​டும்.​ தட்​டச்சு முடித்​தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ​
பணி இடம்: இந்தியா முழுவதும்.
தேர்வு செய்​யப்​ப​டும் முறை:​​ எழுத்​துத் தேர்வு மற்​றும் நேர்​மு​கத் தேர்​வின் அடிப்​ப​டை​யில் தகு​தி​வாய்ந்த நபர்​கள் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வார்​கள்.​
விண்​ணப்​பக் கட்​ட​ணம்:​​ ஸ்டேட் பாங்க் வங்​கி​யில் செலான் மூலம் ரூ.100 விண்​ணப்​பக் கட்​ட​ண​மாக செலுத்த வேண்​டும்.​ ஆன்​லைன்,​​ கிரெ​டிட் கார்டு வழி​யா​க​வும் விண்​ணப்​பக் கட்​ட​ணம் செலுத்​த​லாம்.​
விண்​ணப்​பிக்​கும் முறை:​​ http:​ss​conline.nic.in  என்ற இணை​ய​த​ளத்​தில் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும்.​
ஆன்லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடை​சித் தேதி:​​ 07.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CHSLE_2016_Notice_english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

அஞ்சல் துறையில் பணி

+2 முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் பணி இந்திய அஞ்சயல் துறையின் தமிழக அஞ்சல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Share:

test 18 - Perfect


  1. 1928ஆம் ஆண்டு இந்தியாவிற்கென தனி அரசியலமைப்பு வரைவை வரைந்தவர் யார்
    1. அம்பேத்கர்
    2. இராசேந்திர பிரசாத்
    3. மோதிலால்நேரு 
    4. காந்தியடிகள்
  2. இந்திய அரசியலமைபுக் குழு 1946ஆம்ஆண்டு முதன்முதலாய் கூடியபோது  தற்காலிக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டவர் 
    1. பட்டாபி சீத்தாராமையா
    2. வல்லபாய் பட்டேல்
    3. ராஜேந்திர பிரசாத்
    4. சச்சிதானந்த சின்கா

  3. இந்திய அரசியலமைப்புச் சபையின் சட்ட ஆலோசகராக் நியமிக்கப்பட்டவர் யார்
    1. பி.என். ராய் 
    2. அம்பேத்கார்
    3. கெ.எம்.முன்சி
    4. ஜெ.பி.கிரிபாளினி

  4. அரசியலமைப்பு சபையின்  அடிப்படை  உரிமைகளின் துணைக்குளுவின் தலைவர யார்
    1. பி.என்.ராய்
    2. அம்பேத்கர்
    3. கெ.எம்.முன்சி
    4. ஜெ.பி.கிரிபாளினி

  5. இந்திய அரசியலைமைப்பு உருவாக்குவதில் மத்திய அரசின் அதிகாரங்களுக்கான குழுவின் தலைவர்யார் 
    1. ஜெ.பி.கிரிபாளினி
    2. பி.என்.ராய்
    3. வல்லபாய்  பட்டேல்
    4. ஜவகர்லால் நேரு

  6. இந்திய அரசியலமைப்பை உருவாக்க செலவிடப்பட்ட  தொகை ?
    1. 4.6 கோடி
    2. 6.4கோடி 
    3. 46 கோடி
    4. 64 கோடி

  7. இந்திய அரசியலமைப்பு  அரசியலமைப்பு  உறுப்பினர்களால்கையெழுத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் 
    1. 26- 1-1949
    2. 15-07-1949
    3. 26-11-1949
    4. 26-1-1950

  8. இந்திய அரசியலமைப்பின் "குடியரசு" தன்மை  எந்தநாட்டின்  அரசியலமைப்பிலிருந்து  எடுக்கப்பட்டது 
    1. அமெரிக்கா
    2. கனடா
    3. ஜெர்மனி
    4. பிரான்சு

  9. இந்திய அரசியலமைப்பின் சட்டத்திருத்த முறைகள்  எந்தநாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது 
    1. கனடா
    2. அமெரிக்கா
    3. தென்ஆப்பிரிக்கா 
    4. இங்கிலாந்து

  10. இந்திய அரசியலமைப்புச்  சட்டம் உருவாகுவதில் முக்கிய பங்காற்றியவர்களுள் ஒருவரான கே.எம்.முன்சி  எந்த  மாநிலத்தை சார்ந்தவர் ?
    1. உத்தர பிரதேசம்
    2. சென்னை மகாணம்
    3. டில்லி
    4. குஜராத் 



Share:
+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி ByVenkatesan Sr First Published :27 February 2014 10:29 AM IST புகைப்படங்கள் இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்:8243 பணி: 01. Postal Assistant 02. Sorting Assistant வயதுவரம்பு:27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி:+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் மேலும் உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:மாதம் ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400 விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு .400. SC/ST/PH மற்றும்/ பெண்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.pasadrexam2014.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:27.03.2014 மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.pasadrexam2014.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
Pg candidates for botany, english, economics wanted for st.joseph girls hr sec school madurai. Govt aided post. Last of appln: 17/3/2014. Age less than 35. For further details see dinamalar madurai edition
Share:
BHEL நிறுவனத்தில் நிர்வாகி பணி-DINAMANI
தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிர்வாக அலுவலர் (சிவில்) பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நிர்வாக அலுவலர் (சிவில்)
மொத்த காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பொறியியல் பிரிவில் சிவில் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..43, 550
வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.
முன்அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்ச ஒரு ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துதேவையான சான்றிதழ் நகல்களுடன் தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Bharat Heavy Electricals Limited, H.R.M. Department / Bldg.No.24, Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli - 620014, Tamilnadu
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in /fta2013_try/bhandara /main_advt.jsp என்ற இணையதளத்தைப்பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2013
Share:
ரிலையன்ஸ் நிறுவனத்தில் பயிற்சியுடன் பணி

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பாதுகாப்பு பணிகளை Reliance Group Suport Sevices (RGSS) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. RGSS-ல் Operations, Vigilance, Security Technolaogy and Engineering என்ற பிரிவுகள் உள்னன. RGSS-ல் Probationary Security Executives பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி:Probationary Security Executives
கல்வித்தகுதி:ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCC 'C' சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு:26-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:15.09.2013
அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.
பணிக்காலத்தில் Administrative Services, Hospitality, Law, Logistic, HR, IR போன்ற பிரிவுகளில் விருப்பமானபிரிவில் பயிற்சி பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ril.com என்ற இணையதளத்தில் Young Probationary Security Executive என்ற பகுதியை கிளிக் செய்துஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:18.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும். அல்லது (022) 44771599/44771601 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
Share:
திருவள்ளுவர் பல்கலையில் உதவி பேராசிரியர் பணி

தமிழகத்தின் வேலூரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை: தமிழ்
பணி:Associate Professor
காலியிடம்: 01
பணி:Assistant Professor
காலியிடம்: 01
துறை: பொருளாதாரம்
பணி:Associate Professor
காலியிடம்: 01
பணி:Assistant Professor
காலியிடம்: 01
தகுதி: UGC வதிகளின்படி அடிப்படை தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேரமுகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து
விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.08.2013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Thiruvallur University, Serkkadu, Vellore - 632115.
Share:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி

மருத்துவ சேவைகளுக்காக பலராலும் அறியப்படும் ஜிப்மர் மருத்துவமனையில்காலியாக உள்ள செவிலியர் (ஸ்டாப் நர்ஸ்)பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள்:465
பணி:செவிலியர்(ஸ்டாப் நர்ஸ்)
வயதுவரம்பு:16.08.2013 அன்று உள்ளப்படி 35-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:ஜெனரல் நர்ஸிங் மற்றும் மிட்-வைபரி அல்லது அதற்கு இணையான பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய நர்ஸிங் கவுன்சில் சட்டம் 1947ன் கீழ் நர்ஸ் அண்டு மிட்-வைபரியாக பதிவு செய்திருத்தல் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. இதனை Accounts Officer, JIPMER என்ற பெயரில்பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் புதுச்சேரியில் மாற்றத்தக்கதாக வகையில் எடுத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர்களுக்கு ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி:16.08.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:08.09.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://jobs.freshersworld.com /jobs/JIPMER/Staff&Nurse&68631 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
திருச்சி என்.ஐ.டி -யில் ஐடிஐ அப்ரென்டிஸ் பயிற்சி

உலகப் புகழ் வாய்ந்து திகழ்கின்ற இந்தியாவின் புகழ் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனத்தின் தமிழகத்தின் திருச்சி கிளையில் ஐ.டி.ஐ (எலக்ட்ரீசியன்) முடித்தவர்களுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதிகள்:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்:ஒரு வருடம்.
பயிற்சி தொடங்கும் மாதம்:பயிற்சி தேர்வு செய்யப்படுபவர்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை:பயிற்சியின்போது மாதம் ரூ.5000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (Bio-data) முழுமையான விவரங்களுடன் அதாவது தொடர்பு முகவரி,இ-மொயில் முகவரி, தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி அல்லது அலைபேசி எண்ணுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
அஞ்சல் முகவரி:The Registrar,
Kind Attention: HOD / EEE
National Institute of Technology,
Tiruchirappalli - 620 015,
Tamil Nadu, India.
விண்ணப்பிக்கும் முறை:இந்தப் பயிற்சியில் பங்கு பெற விரும்பினால் உங்கள் தொடர்பு முகவரி, இ-மெயில் முகவரி, மொபைல் எண்ணுடன் கூடிய முழுமையாக நிரப்பப்பட்ட உங்கள் பயோ-டேடா படிவத்தை பின்வரும் முகவரிக்கு 05.08.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது கல்வி நிறுவனத்திற்கு வருகின்ற விண்ணப்பங்கள் அனைத்தையும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு இ-மெயில், கடிதம் அல்லது தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் தேதி:12.08.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பங்கள் சென்று சேறுவதற்கான கடைசி தேதி:05.08.2013
குறிப்பு:சர்வதேச அளவில் நிறுவனத்தின் பெயர் இருப்பதால் இங்கு அப்ரென்டிஸ் பயிற்சி பெறுவது எதிர்கால பணி வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுவதால் வாய்ப்பை வசப்படுத்த்திக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
Share:
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் கிரேடு- III பணிக்கான காலியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:19.07.2013
விளம்பர எண்: 367/2013
பணி: Executive Officer, Grade-III
பதவி கோடு எண்:1654
பணிப்பிரிவு:Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service.
பணிப்பிரிவு கோடு எண்:009
மொத்த காலியிடங்கள்:58
சம்பளம்:ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000
கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அரசு அல்லாத இந்து மத நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு:35-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வு கட்டணம்:ரூ.150
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:19.10.2013
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2013
வங்கி அல்லது அஞ்சல் நிலையம் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:20.08.2013
மேலும் தேர்வு மையங்கள், தேர்வு கட்டண சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் கிரேடு- III பணிக்கான காலியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:19.07.2013
விளம்பர எண்: 367/2013
பணி: Executive Officer, Grade-III
பதவி கோடு எண்:1654
பணிப்பிரிவு:Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service.
பணிப்பிரிவு கோடு எண்:009
மொத்த காலியிடங்கள்:58
சம்பளம்:ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000
கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அரசு அல்லாத இந்து மத நிறுவனங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு:35-க்குள் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வு கட்டணம்:ரூ.150
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:19.10.2013
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2013
வங்கி அல்லது அஞ்சல் நிலையம் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:20.08.2013
மேலும் தேர்வு மையங்கள், தேர்வு கட்டண சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
MOUNT PARK HR. SEC. SCHOOL
Salem main road , Thiyagadurgam
villupuram DT phone: 04151-329384

PG ASST ( Tamil, English, Maths, Physics,Chemistry, Botany and Zoology)
Qualification: with or without B.Ed., and Experience
salary: upto 16000

BT ASST ( Tamil, English, Maths, Science,Social)
Qualification: with or without B.Ed., and Experience
salary: upto 10000

Interested candidate may send their Bio-Data to the Correspondent on or before: 31.07.2013
Share:
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பொது மேலாளர் பணி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள பணி:Deputy General Manager (Depot)
வயது:40க்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்:10 வருடம்
சம்பளம்:32,900 - 58.000 வரை
தகுதி, விண்ணப்பிக்கும் முறை, பிற தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை www.chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய http://chennaimetrorail.gov.in /cmrl_ta/Advt%2004%20Notice.pdfஎன்ற வலைதளத்தை பார்க்கலாம்.
Share:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில்உதவி மேலாளர் (ராஜபாஷா அதிகாரி) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:உதவி மேலாளர் (ராஜபாஷா அதிகாரி)
மொத்த பணியிடங்கள்:17
வயது வரம்பு:30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு இந்தியில் அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆங்கிலத்திலிருந்து இந்திக்குமொழிபெயர்ப்பு செய்யும் பணி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 50.
சம்பளம்:ரூ. 25,700
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.07.2013
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்:11.08.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய www.statebankofindia.com (or) www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
திருச்சி என்.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர் பணி திருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ரன. வயதுவரம்பு:35-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும். மொத்த காலியிடங்கள்:120 துறைவாரியான காலியிடங்கள்:மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் - 06, கணிதம் - 08, மெக்கானிக்கல் - 11, இயற்பியல் - 04, புரடக்சன் இன்ஜினியரிங் - 08, ஆர்க்கிடெச்சர் - 05, கம்ப்யூட்டர் அறிவியல் - 06, கெமிக்கல் - 03, வேதியியல் - 07, சிவில் - 14, எனர்ஜி அண்ட் என்விரான்மெண்டல் - 03, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் - 08, எலெக்ட்ரானிக்ஸ்அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் - 10, ஹூமானிட்டீஸ் - 05, இன்ஸ்ட்ரூமெண்டேசன் - 06, மெட்டலர்ஜிக்கல் - 09, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் - 07. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.07.2013 மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் JRF பணி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் நடைபெறவுள்ள புராஜெக்ட் பணியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(JRF) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:Junior Research Fellow(JRF) Project:Solar Energy Conversion into Electricity using blended polymer electro - lytes for nanocrystalline dye sen-sitized Solarcells. காலியிடம்:01 திட்ட காலம்:3 ஆண்டுகள் கல்வித்தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி பணியில் முன் அனுபவம் இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். சம்பளம்:முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.16,000, மூன்றாவது ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முழு வெள்ளைத்தாளில் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவை தயாரித்து அதில் தற்போதைய புகைப்படம் ஒட்டவும். தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி:01.07.2013 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Dr.J.Madhavan, Principal Investigator, BRNS Project, Department of Chemistry, Thiruvalluvar University, Vellore - 632115.
Share:
கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:Technical Assistant, Laboratory Technician, Lower Division Clerk வயதுவரம்பு:30-க்குள் இருத்தல் வேண்டும். (ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும்) தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்:ரூ.200. இதனை ICARunit SBI என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எ"டுக்க வேண்டும்ம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.sugarcane.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்று இணைத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய முகவரி: DIRECTOR, Sugarcane Breeding Institute, Coimbatore - 641007. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:07.07.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sugarcane.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Share:
Karur Vysya Bank (KVB) Recruitment 2013 – for Clerk Vacancies Name of Post: Clerk Qualification: Candidate must possess any Bachelor degree (10 + 2 +3 pattern) in Second class with 50% and above marks in aggregate from a recognized University in India or any equivalent qualification recognized as such by Central Government.Candidates having major other than computer scienceshould possess a minimum 3 months Computer Course. Application Fee: Fee can be paid in the form of Challan downloaded from website at any branch of Karur VysyaBank Limited Applicants need to pay fee in the form of Demand Draft for Rs.500/-drawn in favour of The KarurVysya Bank Limited and payable at Chennai only. Location: Tamil Nadu. Important Dates: Starting Date for Online Registration:05-06-2013 Last Date for Online Registration: 15-06-2013 Last Date for Receipt of Application: 18-06-2013 How to Apply: Candidates are required to apply online through website www.kvb.co.in(Careers Page) from 05-06-2013 to15-06-2013. After applying online candidates should take the print of the “Demand Draft Details” formand send the filled in form along with DD to The Karur Vysya Bank Limited, Central Office – Hrd, Erode Road, Karur – 639 002, Tamil nadu
Share:
SSC Southern Region Recruitment 2013 in chennai Download notification SSC Southern Region official Website Name of Post: Scientific Assistant-I Photographer Grade-III Senior Scientific Assistant (Explosives) Post Graduate Teacher (Chemistry) Trained Graduate Teacher (Tamil) Assistant Field Officer Library & Information Assistant Zoological Assistant Senior Radio Technician How to Apply: Application in prescribed format should be sent in an envelope superscribed with bold letters as “Application forthe posts of ……………….. ” on or before 01/07/2013 (08/07/2013 for candidates from far-flung areas) to Office of the Regional Director, Staff Selection Commission, (Western Region) 2nd Floor, EVK Sampath Building, CollegeRoad, Chennai – 600 217.
Share:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நீர்வள ஆராய்ச்சியாளர் பணி சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர் ஆதார ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் ஆராய்ச்சி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Research Associate காலியிடம்: 01 சம்பளம்: ரூ.24,000 கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture Business Management பாடத்தில் எம்.பி.ஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Research Fellow காலியிடங்கள்: 04 சம்பளம்: ரூ. 18,000 கல்வித்தகுதி: Hydrology, water Resources Engineering, Irrigation water Management, Agricultural Engineering, Integrated water Resource Management போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது Agriculture, Horticulture பாடத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி முடித்து இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technical Assistant காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.12,000 கல்வித்தகுதி: civil, Agricultural and Irrigation Engineering, Food Processing Engineering, Environmental Engineering, Agri Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி, டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Field Assistant காலியிடங்கள்: 11 சம்பளம்: ரூ.6,000 கல்வித்தகுதி: Civil, Agriculture, Horticulture பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது +2 -வில் Agriculture, Horticulture பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் விவசாயம், விவசாய மேலாண்மை போன்ற விவசாயத் துறைசார்ந்த பணிகளில் உள்ள பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் Improving Agricultural Productivity and Profitability throgh Horticultural Crop Diversification in the feeder zones of metro city என்ற திட்டத்தின்கீழ் 2015 டிசம்பர் மாதம் வரை பணிபுரிய வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: முழு வெள்ளைத்தாளில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி, கல்வித்தகுதி, பணி அனுபவம், தொலைபேசி எண் போன்ற முழு விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டாவை தயார் செய்து தெளிவாக பூர்த்தி செய்துஅதனுடன் கல்வித்தகுதி, பணி அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கவரின்மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரிவதற்கான கடைசி தேதி: 03.06.2013 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for Water Resources, Anna University, Chennai - 600025
Share:
பட்டதாரிகளுக்கு மத்திய அரசில்அறிவியல் உதவியாளர், ஆசிரியர் பணி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை Staff Selection Commission மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: SSC/SR/2/2013 பணி: Scientific Assistant-I (categoryNo: SR-01) காலியிடங்கள்: 03 சம்பளம்: ரூ.5,200 - 20,200 வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: B,Sc Agriculture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Photographer (Cat No: SR-02 காலியிடம்: 01 சம்பளம்: ரூ.5,200 - 20,200 வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography, Photomicrography, Developing, Printing, Enlarging, Copying போன்ற புகைப்பட படத்துறை சார்ந்த பணிகள் மற்றும் விலங்கியல் புகைப்பட கலைஞராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Scientific Assistant-I (Cat No: SR-B-01) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Chemistry, Forenic Science பாடத்தில் M,Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc. Forensic Science பட்டதாரிகள் B.Sc படிப்பில் வேதியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பணி: Post Graduate Teacher (Chemistry) (Cat No: SR-B-02) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: M.Sc. Chemistry படிப்புடன் B.Ed, D.Ted பட்டம் பெற்றிருக்க வேண்டும். +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. பணி: Trained Graduate Teacher (Tamil) (Cat.No: SR-B-03) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: தமிழ்பாடத்தில் பட்டப்படிப்பை முடித்து B.Ed, D.Ted தகுதியை பெற்றிருக்க வேண்டும். 6 முதல் 10 -ம் வகுப்புவரை தமிழாசிரியராக பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. பணி: Assistant Field Officer (Cat.No: SR-B-04) காலியிடங்கள்: 13 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: Soil Science, Agriculture Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Library & Information Assistant (Cat.No: SR-B-05) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டப்படிப்புடன் B.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Zoological Assistant (Cat.No: SR-B-06) காலியிடங்கள்: 02 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: B.Sc (Hons), B.Sc. Zoology படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Radio Technician (Cat.No: SR-B-07) காலியிடம்: 01 சம்பளம்: ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன் Radio Engineering பாடத்தில் பி.இ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Electrical/ Wireless உபகரணங்களைகையாளுவதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Central Recruitment Fee Stamps (CRFS) மூலமாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் செலுத்தி அதற்குரிய அஞ்சல் தலையை விண்ணப்பத்தின் தேவையான இடத்தில் ஒட்டி பதிவு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: www.sscsr.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Director (SR), Staff Selection Commission, 2nd Floor, EVK SampathBuilding, College Road, Chennai - 600217 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2013 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscsr.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support